பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்டம்பர் 13) தொடங்கியது.
கல்வி மற்றும் பணி காரணங்களுக்காக வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இயக்கப்படும் சேரன், நீலகிரி ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. சென்னை – செங்கோட்டை (பொதிகை ரயில்), சென்னை – மதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ்) ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் மட்டுமே டிக்கெட்டுகள் உள்ளன.
நெல்லை விரைவு ரயிலிலும் காத்திருப்போர் பட்டியலில் மட்டுமே டிக்கெட்டுகள் உள்ளன. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே மற்ற ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.
ஜனவரி 12 ஆம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்க உள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக மக்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்: தமிழ்நாட்டில் எச்சரிக்கை!
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?