குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள் 14 நாட்களுக்குள் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டிகளில் சிலர் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின்படி குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராத தொகையைச் செலுத்துமாறு நீதிமன்றம் மூலமாக வாரண்ட் பெற்று குறிப்பிட்ட வாகன ஓட்டிகளுக்குப் போக்குவரத்து போலீசார் அனுப்புகின்றனர்.
ஆனால் பலர் அபராத தொகையைச் செலுத்தாமலே வாகனத்தை இயக்கி வருவதால் குடிபோதையில் சிக்குபவர்களின் வாகனங்களை ஏலம் விட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நீதிமன்ற வாரண்ட் வழங்கி 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகை செலுத்தவில்லை எனில், சம்பந்தப்பட்டவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!
திடீர் பயணமாக டெல்லி விரைந்த ஆளுநர்!