மெட்ரோ பணிகளுக்காக சென்னையின் முக்கிய இடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதுகுறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னையில் உயர்ந்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது காரணீஸ்வரர் கோயில் தெரு அருகே சாந்தோம் நெடுஞ்சாலை முதல் சிஎம்ஆர்எல் லைட் ஹவுஸ் சாலை வரை போக்குவரத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை, காரணீஸ்வரர் கோயில் தெரு அருகே சாந்தோம் நெடுஞ்சாலை சிஎம்ஆர்எல் லைட் ஹவுஸ் ஸ்டேஷன் மெட்ரோ ரயில் பணியை கருத்தில் கொண்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 9) முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
இதையடுத்து, காந்தி சிலையிலிருந்து (காமராஜர் சாலை) சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பில் லூப் ரோடு, பட்டினப்பாக்கம் பேருந்து டெர்மினஸ், தெற்கு கால்வாய் வங்கி சாலை சந்திப்பு (சாந்தோம் ஹை ரோடு – டிஜிஎஸ் தினகரன் சாலை சந்திப்பு) நோக்கி திருப்பி விடப்படும்.
காரணீஸ்வரர் கோயில் தெரு சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் கட்டாயம் இடதுபுறம் திரும்பி லைட் ஹவுஸ் வழியாக இலக்கை அடையலாம். காரணீஸ்வரர் கோயில் தெருவில் இருந்து பாபநாசம் சிவன் சாலை சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
அதோடு லூப் ரோடு, சாந்தோம் நெடுஞ்சாலை அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒருவழி சாலையாக செயல்படும் என்றும், சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Dhanush : தனுஷின் ‘குபேரா’ கதை இதுதானா?
“உறுதிமொழி பிடிச்சிருந்தா உறுப்பினரா சேருங்க” : விஜய் அழைப்பு!