Traffic change in Nungambakkam

நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து அதிரடி மாற்றம் : எந்த சாலையில் செல்ல வேண்டும்?

தமிழகம்

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும்  ஸ்டெர்லிங் சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துத்துறை இன்று (பிப்ரவரி 12) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

”1.அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், 2.நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் 3.ஸ்டேர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் 11.02.2024 முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு, உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி) இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.

இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். (மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதை).

அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம். (எற்கனவே உள்ளபடி).

வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு, G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம்.

மற்றபிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிப்பாதை போக்குவரத்து அனுமதிக்கப்படும். மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

வாகன ஓட்டிகள் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது ஏன்? : கேப்டன் உதய் விளக்கம்!

வேலைவாய்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *