ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாடு வருகிற ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
அதுமட்டுமின்றி ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைச் சுற்றிப் பார்க்கச் சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதன்காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி20 மாநாடு கூட்டம் நடைபெறுகிறது.
மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர இருப்பதால் பாதுகாப்பு நலன் கருதி, பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
ஆஸ்திரேலியா ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெலாரஸ் வீராங்கனை
இந்திய போர் விமானங்கள் மோதி கோர விபத்து: விமானி உயிரிழப்பு!