tamilnadu to famous tourist place IRCTC

தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா ரயில்: ஐ.ஆர்.சி.டி.சி

தமிழகம்

ஐ.ஆர்.சி.டி.சி தென் மண்டலம் சார்பில் 12 நாட்கள் பயணிக்கக் கூடிய பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் இன்று (ஜூன் 15)மாட்டுத்தாவணி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

”இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலா பயணிகளுக்காக பிரத்தியேக பாரத் கௌரவ சுற்றுலா ரயில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயிலில் மூன்று குளிர்சாதனப் பெட்டிகள், 8 ஸ்லீப்பர் கோச்சுகள், ஒரு பான்டரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.

பாரத் கௌரவ சுற்றுலா ரயில் ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டலம் சார்பில் ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஜூலை மாதம் 1ம் தேதி பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலானது கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் பயணமானது 12 நாட்களில் ஹைதராபாத், ஆக்ரா,மதுரா, வைஷ்ணவி தேவி, அமிர்தரஸ் புதுடெல்லி ஆகிய இடங்களில் அமைந்துள்ள முக்கிய கோவில்கள் மற்றும் சிறப்பு சுற்றுலா தலங்களுக்கு செல்லவுள்ளது.

இதில் படுக்கை வசதியுடன் பயணிக்க நபர் ஒருவருக்கு 22,350 ரூபாயும், குளிர்சாதன படுக்கை வசதியுடன் பயணிக்க நபர் ஒருவருக்கு 40,350 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலில் மேற்கண்ட இடங்களில் பயணிக்க பயணிகளுக்கு தங்குமிடம் உள்ளூரை பார்வையிடுவதற்கான போக்குவரத்து, ரயில் பயணத்தின் போது தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி, மற்றும் பயணிகளுக்கு பயண காப்புறுதி ஆகிய வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரயிலில் பயணித்தால் எல்டிசி சான்றிதழ்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாரத் கௌரவ சுற்றுலா ரயிலின் தகவல்களைப் பெற மதுரை – 8287932122 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

“சீண்டிப் பார்க்காதீர்கள்” : பாஜக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும்- அமலாக்கத்துறை மனு!

+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *