தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால், மருத்துவக்குழுவினரும் ஏராளமாக உள்ளனர்.
கடும் வெயில் காரணமாக 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, மாநாட்டில் பணியாற்றி வரும் மருத்துவர் நிமலேஷ் மின்னம்பலத்திற்கு அளித்த பேட்டியில், “இன்று காலையிலேயே சீக்கிரமாகவே வந்துட்டோம். அனைத்து எமர்ஜென்சி மாத்திரைகளும் எங்ககிட்ட உள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இங்கு உள்ளனர்.
இது வரைக்கும் 100 பேருக்கு மேல் பாதிப்படைந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வெயில் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைவாகி பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம். தண்ணீர் அடிக்கடி குடித்தால் இந்த பிரச்சனை வராது.
பிரஷர் இருப்பவர்களும் சிகிச்சைக்கு வந்தனர். அதே போல, கீழே விழுந்து அடிபட்டவர்களுக்கும் சிகிச்சை அளித்து அனுப்பி வைத்துள்ளோம். மேம்பட்ட சிகிச்சை தேவைப்பட்டால், கேம்ப் 1க்கு ஆம்புலன்ஸ் வழியாக மக்களை அனுப்பி வருகிறோம். அங்கு சிறப்பு மருத்துவக்குழுவினர் இருக்கின்றனர். மாநாட்டில் மொத்தம் 18 மருத்துவ கேம்ப்கள் உள்ளன. 150 டாக்டர்கள். நர்சுகள் 150பேர் பணியில் உள்ளோம். ஆம்புலன்சும் ரெடியாக இருக்கிறது.
விஜய் கட்சியின் சார்பில் ஒத்துழைப்பு கொடுப்பதால், எந்த பிரச்னையும் இல்லாமல் எங்கள் பணியை செய்கிறோம். கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆம்புலன்சில் நோயாளிகளை இடம் மாற்றுவதுதான் கொஞ்சம் சிரமமாக உள்ளது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ராகு காலத்திற்கு முன்பு தவெக கொடியேற்றிய விஜய்
ரேம்ப் வாக்கில் மாஸ் காட்டிய விஜய்… தொண்டர்கள் பொழிந்த துண்டு மழை!