டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

பள்ளிகொண்டா பொதுக்கூட்டம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு தமிழ்நாடு வந்தடைந்த நிலையில் இன்று (ஜூன் 11) வேலூர், பள்ளிக்கொண்டாவில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

சேலத்தில் முதல்வர் ஸ்டாலின்

சேலத்தில் கருணாநிதி சிலை மற்றும் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து கருப்பூரில் நடைபெறும் விழாவில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பெண்கள் இலவச பேருந்து!

கர்நாடகாவில் அரசு பேருந்தில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறார்.

பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதையொட்டி பள்ளி வளாகங்களில் இன்று தூய்மை பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்படுகிறது.

முக்கொம்பில் பராமரிப்பு பணி தீவிரம்!

மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி முக்கொம்பு மேலணையில் இன்று பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 386வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.

பாவலரேறு நினைவு தினம்!
தனித்தமிழறிஞர், புலவர், இதழாளர், பொதுவுடமை தமிழ்தேசிய செயல்பாட்டாளர் என பன்முகத் தன்மை கொண்ட பாவலரேறு பெருஞ்சித்தினாரின் நினைவு தினம் இன்று!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனல்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்-நார்வேயின் வீரர் கேஸ்பர் ரூட் இன்று மோதுகின்றனர்.

பொது நுழைவுத்தேர்வு!

பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் பி.எச்.டி. மற்றும் எம்.பில் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது.

வெப்பநிலை தொடர்கிறது!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அரிசி உணவைத் தவிர்ப்பது நல்லதா?

அமித்ஷாவை சந்தித்த முக்கிய பிரமுகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment