வழக்கமாக அரிசி ஊத்தப்பம் சாப்பிடும்போது வெறும் மாவுச்சத்து மட்டுமே கிடைக்கும். ஆனால், அதை பருப்பு ஊத்தப்பமாகச் செய்து சாப்பிடும்போது புரதச்சத்து, அமினோ அமிலங்கள், தாது உப்புகள் போன்றவையும் கிடைக்கும். இதனுடன் வெங்காயம், சாமை அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். அனைவருக்கும் ஏற்ற சிற்றுண்டியாக அமையும்.
என்ன தேவை?
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசி, பருப்பைக் கழுவி, தனித்தனியாக நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு, மிக்ஸியில் ரவையாக அரைக்கவும். கெட்டித் தயிரில் இதனை, 10 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாயைத் தாளித்து, மாவில் சேர்த்து உப்பு போட்டுக் கிளற வேண்டும். வெங்காயத்தை எண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளவும். தோசைக் கல்லில் எண்ணெய்விட்டு ஊத்தப்பமாக ஊற்றி, வதக்கிய வெங்காயம் ஒரு கைப்பிடி போட்டு, மூடிவிட வேண்டும். திருப்பிப் போடக் கூடாது.
கிச்சன் கீர்த்தனா: காரப்புட்டு