ரூ.2,000 நோட்டுகளை மாற்ற நாளை கடைசி நாள்!

Published On:

| By Monisha

Last day to exchange Rs 2000 notes

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி ரூ.2,000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றுவதற்கான கால அவகாசம் நாளை (செப்டம்பர் 30) முடிவடைகிறது.

2016-ம் ஆண்டு பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள நோட்டுகளை அரசு திரும்பப் பெற்ற பிறகு ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதிக மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வந்ததிலிருந்தே மக்கள் சில்லறை மாற்ற சிரமப்பட்டார்கள்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அதிரடியாக 2,000 ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாகத் திரும்பப் பெறுவது என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் வரம்பு இல்லாமல் தனது வங்கிக் கணக்குகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி சொல்லியிருந்தது.

எனினும், கேஒய்சி மற்றும் இதர முறையான ஆவணங்களைக் கொண்டு டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

முதலில் 20,000 ரூபாய் வரை ஒரே நேரத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என தனது முந்தைய அறிவிப்பில் ஆர்பிஐ கூறி இருந்தது.

தற்போது பான் தகவல்களை செலுத்தி ரூபாய் 50,000 வரை மாற்றிக் கொள்ள இயலும். கேஒய்சி-யின் மூலம் இதர கட்டுப்பாடுகள் இன்றி பணத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

2,000 ரூபாய் நோட்டுகளை முழுவதுமாக நான்கு மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் நாளையுடன் (செப்டம்பர் 30) ரிசர்வ் வங்கியின் கால அவகாசம் முடிவடைகிறது.

ஆகஸ்ட் 31 நிலவரப்படி ரூ.0.24 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாகவும், புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதாவது, 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறும் அறிவிப்பு வெளியான மே 19ஆம் தேதியில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 93% நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் தரவுகள் சொல்கின்றன.

ராஜ்

பௌர்ணமியில பாருங்க விக்ரம் லேண்டர்: அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை:  ஜெயக்குமாருக்கு பதில் கே.பி.முனுசாமி… பன்னீர் போடும் குண்டு! அண்ணாமலையின் முடிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel