Tomato prices rise again due to continued rain

தொடரும் மழையால் தக்காளி விலை மீண்டும் உயர்வு!

தமிழகம்

தொடரும் மழையால் தக்காளியின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தக்காளி விலை கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிட்ட தக்காளிகள் மழையால் அழிந்ததே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. அதன்பிறகு வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவு தக்காளி கொண்டு வரப்பட்டும், உள்ளூர் தக்காளி விற்பனைக்கு வந்ததை அடுத்தும் விலை குறையத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்துக்கு முன் அதிகப்பட்சம் கிலோ ரூ.15 வரை மட்டுமே விற்பனையானது.

இந்த நிலையில் தக்காளி விலை திடீரென்று உயர ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை உயர்ந்தது. நேற்று இந்த விலை இன்னும் அதிகரித்து கிலோ ரூ.50 வரை விற்பனையானது. காய்கறி மார்க்கெட்டில் 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.200 முதல் ரூ.450 வரை விற்பனையானது.

சில்லறை விற்பனையில் ரூ.40 வரை விற்பனையானது. தள்ளுவண்டிகள், மளிகை கடைகள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் கிலோ 50 ரூபாய்க்கு தக்காளி விற்பனையானது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி அழுகிவிடுவதாகவும், இதன் காரணமாக விலை உயர்ந்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சபரிமலை சீசனான கார்த்திகை, மார்கழி மாதங்களில் காய்கறிகளின் விலை உயர்ந்து வரும் நிலையில் தக்காளியின் விலையும் உயர்ந்துவருவது பொது மக்களுக்கு கவலையை அளித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ் 

பியூட்டி டிப்ஸ்: மனநலனுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தொடர்புண்டா?

80ஸ் பில்டப்: விமர்சனம்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *