Tomato price will exceed Rs.100

இன்னும் சில நாட்களில் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டும்… என்ன காரணம்?

தமிழகம்

சென்னை போன்ற பெருநகரங்களில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் விலை ரூபாய் 50 முதல் 70 வரை விற்கப்படும் நிலையில் இன்னும் சில நாட்களில் கிலோ ரூ.100-ஐ தாண்டும் என்று தக்காளி மண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தக்காளி அதிகம் விளையும் மாவட்டங்களாக திண்டுக்கல், தேனி, ஒட்டன்சத்திரம், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 12,000 ஹெக்டேரில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு 12,000 செடிகள் நடவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஏக்கருக்கு சராசரியாக 30 டன் தக்காளி மகசூல் கிடைக்கிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் தக்காளி, ராயக்கோட்டை, ஓசூர் காய்கறி சந்தைகள் மூலம் பல மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ராயக்கோட்டை தக்காளி சந்தையில் தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து பேசியுள்ள அங்குள்ள தக்காளி மண்டி உரிமையாளர் மற்றும் சிலர், “தக்காளியைப் பொறுத்தவரை ஆண்டுதோறும், மே, ஜூன் மாத சீசனில் வரத்து அதிகமாக இருக்கும். தற்போது தமிழ்நாட்டில் தக்காளி செடிகளில் புதிய வகை நோய் தாக்குதல் ஏற்படுவதால் விளைச்சல் குறைவாக உள்ளது. மேலும், ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு தக்காளி செடிகள் அதிக அளவில் அழிந்துவிட்டன. ஆந்திர மாநில பகுதிகளில் இருந்து வரும் தக்காளிகள் சென்னை, வேலூர், சேலம், அரக்கோணம் போன்ற இடங்களுக்குச் செல்லும்.

ராயக்கோட்டை சந்தையில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மார்த்தாண்டம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளுக்கு அதிக அளவில் செல்லும். ஆந்திர மாநிலத்தில் தக்காளி விளைச்சல் சரிவாலும், தமிழ்நாட்டில் தக்காளி செடிகளில் நோய் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால்தான் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 25 கிலோ எடை கொண்ட கூடை (கிரேடு) விலை ரூ.600 முதல் அதிகபட்சமாக, ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று தற்போது தரத்தை பொறுத்து ஒரு கிரேடு, குறைந்தபட்சம் ரூ.600-லிருந்து, அதிகபட்சமாக ரூ.1,800 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ ரூ.40-க்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள், போக்குவரத்து இதர செலவுகளுடன் ரூ.60 முதல், ரூ.80 வரை என்ற விலையில் விற்பனை செய்கின்றனர். இந்த நிலை மேலும் தொடரும் என்பதால் இன்னும் 15 நாட்களுக்கு பிறகு தக்காளி விலை உயரும். கிலோ ரூ.100-ஐ தாண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : விமானப்படை சாகச நிகழ்ச்சி முதல் பிக்பாஸ் 8வது சீசன் ஆரம்பம் வரை!

பியூட்டி டிப்ஸ்: தலைக்கு எண்ணெயே வைக்காதவரா நீங்கள்?

பொது மேடையில் துப்பாக்கியுடன் வந்த ஈரான் அதிபர்: காரணம் என்ன?

டாப் 10 நியூஸ் : ஜெய்சங்கரின் இலங்கை பயணம் முதல் தவெக மாநாடு பந்தல் கால் நடும் விழா வரை!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம்: மூன்று வழித்தடங்கள்… ரூட் இதுதான்!

Tomato price will exceed Rs.100

+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *