சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் இன்று (ஜூலை 31) ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு மற்றும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் தக்காளியை பயிரிடாமல் இருந்ததால் தக்காளி விலை கடுமையான ஏற்றம் கண்டது. தினசரி சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும் தக்காளியின் வரத்து படிபடிப்படியாக குறைய தொடங்கியது.
குறிப்பாக தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை சதமடித்தது. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் தக்காளியை வாங்கி சமைக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
தக்காளியுடன் இணைந்து பிற காய்கறிகளின் விலையும் அதிகரித்ததால் மக்களை விலையேற்றத்தில் இருந்து காக்க வேண்டும் என்று அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆனாலும் விலையேற்றத்தில் இருந்து முழுமையான தீர்வு என்பது மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனிடையே கடந்த ஒரு வாரம் மட்டும் விலை சற்று குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் மீண்டும் தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கும் சில்லறை விற்பனையில் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.20 விலை உயர்ந்து மொத்த விற்பனையில் ரூ.180-க்கும் சில்லறை விற்பனையில் ரூ.200-க்கும் ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
கடைசி நாளான இன்று ஐடிஆர் தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!