கடந்த ஒரு வாரக்காலமாக தமிழகம் முழுவதும் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து சில்லறை விற்பனையில் ரூ.100-ஐ எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சமீப காலங்களாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையால் விவசாயிகள் விரக்தியடையும் சூழல் உருவானது. இதனால் பல விவசாயிகள் தக்காளி சாகுபடியைக் கைவிட்டு மாற்றுப்பயிர் சாகுபடி செய்யத் தொடங்கினர். ஒரு கிலோ தக்காளி ரூ.5-க்கும் குறைவாக விற்ற நிலையால் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் பலரும் டிராக்டர் மூலம் தக்காளிப் பயிர்களை அழித்த அவலமும் அரங்கேறியது.
மேலும் வட மாநிலங்களில் கடுமையான வெப்பத்துக்குப் பிறகு பலத்த மழை பெய்து வருகிறது. இது தக்காளி விரைவாக அழுகுவதற்கு வழிவகுத்ததால் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் தக்காளி வரத்தும் குறைந்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதுவே தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகியுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து பேசியுள்ள கோயம்பேடு மார்க்கெட் மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட், “தினசரி 55 முதல் 60 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். நேற்று 30 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலை அதிகரித்துள்ளது” என்றார்.
ராஜ்
பாட்னா சந்திப்பு வகுத்துள்ள புதிய அரசியல் பாதை!
வேலை வழிகாட்டுதல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!