தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், கடத்தூரை சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர் பயிராக காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இதில் அதிக அளவு தக்காளியை பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த, 10 நாட்களுக்கு முன்பு , ஒரு பாக்ஸ், தக்காளி விலை ரூ. 100 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அறுவடை கூலி கூட கிடைக்காத நிலையில் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் வரை 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ், 200 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி நேற்று வரத்து குறைவால் திடீரென விலை உயர்ந்து, 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ், ரூ 500க்-கு விற்கப்பட்டது. இதனால் தக்காளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் 15 நாட்களுக்கு முன்பு ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை தற்போது ரூ.50 வரை விற்கப்படுகிறது. தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பின்வீல் சமோசா
சென்சாரில் 60 கட் வாங்கிய ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா’!