தக்காளி விலை இருமடங்கு உயர்வு!

தமிழகம்

தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. 

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வழக்கமாக 90 வாகனங்களில் வரும் தக்காளி தற்போது 40 ல் இருந்து 45 வாகனங்களில் மட்டுமே வருகிறது.

இதனால் நேற்று (செப்டம்பர் 2) 20 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Tomato price has doubled in chennai

இதேபோன்று ஈரோட்டில் வஉசி மைதானத்தில் செயல்படும் காய்கறி சந்தைக்கு தாளவாடி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், பெங்களூரு மற்றும் கர்நாடகா, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.

நாள்தோறும் 8 ஆயிரம் பெட்டி தக்காளி விற்பனைக்கு வரும் நிலையில் நேற்று 5 ஆயிரம் பெட்டி தக்காளி மட்டுமே வந்தது.

அங்கு கடந்த வாரம் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையான நிலையில் இருமடங்கு விலை உயர்ந்து ரூ.35க்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், தக்காளி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நீடித்தால் உற்பத்தி குறைந்து அனைத்து காய்கறிகளின் விலையும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கலை.ரா

விலைவாசி உயர்வு- போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “தக்காளி விலை இருமடங்கு உயர்வு!

  1. இந்த விலை உயர்வு வியாபாரி மட்டுமே….விவசாயிக்கு இல்லை….மேலும் வெங்காயம் விலை பற்றி செய்திகள் போட்டால் சிறப்பாக இருக்கும்….வெங்காயம் விளைச்சலில் எவ்வளவு லாபம் நஷ்டம் என்று செய்தி போடுங்கள்

Leave a Reply

Your email address will not be published.