சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஆகஸ்ட் 2) தக்காளி விலை ரூ.10 குறைந்து ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா முழுவதும் கடந்த மாதம் முதல் தக்காளி விலை உச்சத்தில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தக்காளி விலை மட்டுமல்லாது சின்ன வெங்காயம், இஞ்சி, மிளகாய் போன்ற காய்கறி விலைகளும் உயர்ந்து காணப்படுகிறது.
காய்கறி விலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமை அங்காடி மற்றும் 500 நியாய விலை கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நியாய விலைக்கடைகளிலும் 50 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை ரூ.10 குறைந்து இன்று ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.190-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று 300 டன் தக்காளி வந்த நிலையில் இன்று 400 டன் வந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை விலை (1 கிலோ)
சின்ன வெங்காயம் – ரூ.90, உருளை – ரூ.22, பீன்ஸ் – ரூ.90, கேரட் – ரூ.50, வெண்டைக்காய் – ரூ.35, இஞ்சி – ரூ.220, பூண்டு – ரூ.210, தேங்காய் – ரூ.27, பச்சை மிளகாய் – ரூ.50
செல்வம்
WI vs IND: ஒரு கேப்டனாக… வெற்றி குறித்து ஹர்திக் பாண்ட்யா
அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு: ED மனு இன்று விசாரணை!