சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை இன்று (ஆகஸ்ட் 5) ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமை அங்காடி கடைகள் மற்றும் 500 நியாய விலை கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த வாரம் தக்காளி விலை சற்று குறைந்து காணப்படுகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.20 விலை குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று 550 டன் தக்காளி வரத்து இருந்த நிலையில் இன்று 600 டன்னாக வரத்து அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் விலை குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை (1 கிலோ)
வெங்காயம் – ரூ.22, உருளை – ரூ32, கேரட் ரூ.60, சின்ன வெங்காயம் – ரூ.80, பீன்ஸ் – ரூ.90, பீட்ரூட் – 38, வெண்டைக்காய் – ரூ.35, கத்தரிக்காய் – ரூ.30, மிளகாய் – ரூ.45, இஞ்சி – ரூ.210, பூண்டு – ரூ.200, தேங்காய் – ரூ.27, அவரைக்காய் – ரூ.40
செல்வம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோபுர சுவர் இடிந்தது!
குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை: பயண விவரம்!