கிச்சன் கீர்த்தனா: தக்காளி இடியாப்பம்!

தமிழகம்

குழந்தைகளைப் பற்றிப் பெரும்பாலான அம்மாக்கள் சொல்லும் புகார், “என் பையன் சரியாவே சாப்பிட மாட்டேங்கிறான்… எதைக் கொடுத்தாலும் சாப்பிடாம அடம்பிடிக்கிறான்… சிப்ஸ், சாக்லேட்னு நொறுக்குத்தீனிகளையே விரும்பிச் சாப்பிடுறான்” என்பதுதான்.

இதில், குழந்தைகள் மீது மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. ஒரேமாதிரியான உணவைக் கொடுக்கும்போது, அவர்களுக்கு ஒருவித சலிப்பு வந்துவிடும்.

அப்படிப்பட்ட நிலையில்  எளிதில் செரிமானம் ஆகும், எளிதாகச் செய்யக்கூடிய இந்த தக்காளி இடியாப்பம் செய்து கொடுக்கலாம்.

தக்காளியில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். செலினியம் மற்றும் இதர வைட்டமின்கள், தாது உப்புக்கள் கிடைக்கும்.

என்ன தேவை?

வேக வைத்த இடியாப்பம் – 2 கப் 

கடுகு, உடைத்த உளுந்து – தலா ஒரு டீஸ்பூன் 

பொடியாக நறுக்கிய தக்காளி – அரை கப்

பச்சை மிளகாய் – 3 (நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்) 

மல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்

கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி (துருவியது) – ஒரு டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு, எண்ணெய் –  தேவையான அளவு 

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தைத் தாளித்து, இஞ்சி, முந்திரி, பச்சைமிளகாய் சேர்த்துத் தாளித்து, வெங்காயத்தை வதக்கி, தக்காளி, உப்பு, சிறிது கரம் மசாலா மற்றும் வேகவைத்த இடியாப்பத்தையும் போட்டுக் கிளறவும். பிறகு, பொடியாக நறுக்கிய மல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடம்பு ஏறவில்லையே என்று ஏங்குபவரா நீங்கள்?

கிழங்கு கட்லெட்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *