சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தாலும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்று ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழகத்தில், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை, திருமாந்துறை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி கட்டணம் உயர்த்தப்பட்டது.
5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு காரணமாக லோடு லாரிகள் அதிக அளவு சுங்க கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுங்க கட்டணம் உயர்வால் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயரக்கூடும் என்று தகவல் வெளியானது.
ஏற்கனவே ஆம்னி பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் இந்த தகவல் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படாது என்று ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் நேற்று (செப்டம்பர் 2) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” சுங்கச் சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த பொருளாதார நெருக்கடியை ஆம்னி பேருந்து உரிமையாளர்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படாது.
அதேசமயம் மத்திய அரசு சுங்க கட்டணம் விவகாரத்தில் தலையிட்டு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டணத்தை திரும்ப பெற்று, வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Paris Paralympics 2024: ஒரே நாளில் 8 பதக்கங்களை வென்ற ‘இந்தியா’!
வேலைவாய்ப்பு : உச்ச நீதிமன்றத்தில் பணி!
குறைந்த விலையில் சின்ன வெங்காயம் – அதிக விலையில் பெரிய வெங்காயம்: என்ன காரணம்?