இன்று முதல் உயரும் சுங்கக் கட்டணம்: எந்த வாகனத்துக்கு எவ்வளவு?

தமிழகம்

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் சுங்கக் கட்டணம் உயருகிறது.

சென்னை, இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, ஓமலூர், தர்மபுரி, சமயபுரம், கரூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி (இன்று) முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது.

தினமும் பஸ், லாரி, வேன், கார் உள்ளிட்ட 22,000 வாகனங்கள் கடந்து செல்லும் சமயபுரம் சுங்கச் சாவடியில்,

காருக்கு ஒரு நாள் சுங்கக் கட்டணம் ரூ.45  அதே கட்டணமாகவும், மாதாந்திர கட்டணம் ரூ.1,400இல் இருந்து 1,605 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

பேருந்துக்கு சுங்கக் கட்டணம் ரூ.165இல் இருந்து ரூ.185 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.4,905இல் இருந்து ரூ.5,620 ஆகவும் உயர்கிறது.

லாரிக்கு சுங்கக் கட்டணம் ரூ.265இல் இருந்து ரூ.300 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.7,880 இல் இருந்து ரூ.9,035 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

அதாவது, முன்பிருந்த கட்டணத்திலிருந்து 15% உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி சுங்கச்சாவடி வழியாக நாள் ஒன்றுக்கு சுமார் 20,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

அங்கு கார், ஜீப் வாகனங்களுக்கு ஒரு நாளில் ஒருமுறை அந்த வழியாக பயணிக்க கட்டணமாக கார் மற்றும் ஜீப் ரூ.65இல் இருந்து ரூ.75 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.230இல் இருந்து ரூ.260 ஆகவும் உயர்ந்துள்ளது.

கார், ஜீப் வாகனங்களுக்கு ஒரு நாளில் பலமுறை பயணிக்க வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.100இல் இருந்து ரூ.110 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.344இல் இருந்து ரூ.385 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கார் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு மாதக் கட்டணமானது ரூ.1,955இல் இருந்து ரூ.2,210 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

லாரி மற்றும் பேருந்துகளுக்கு மாத கட்டணம் ரூ.6,845இல் இருந்து ரூ.7,735 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

இந்த சுங்கக் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

-ராஜ்

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை குறைக்க வேண்டும்! – ஓ.பன்னீர்செல்வம்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *