பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.
ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் நாளை (டிசம்பர் 27 ) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ம் தேதி சென்னையில் முதல்-அமைச்சரும் மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தெரு வாரியாகவோ, வரிசை எண் அடிப்படையிலோ டோக்கன் வழங்க வேண்டும். மேலும், எந்த நாளில், எந்த நேரத்தில் கடைக்கு வரவேண்டும் என்பதையும் டோக்கனில் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
“பைக் இன்ஸ்ட்ரக்டர் தேவை” இளைஞர் செய்த வினோத செயல்!