கள்ளச் சாராயத்தால் தமிழகத்தில் அண்மையில் இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்துபோன சம்பவத்துக்குப் பின்னர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தென்னை, பனை மரங்களில் கள் இறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சில நாட்களுக்கு முன்பு வலியுறுத்திய நிலையில், கள் இறக்குவது தொடர்பாக அனைத்து தரப்பினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (மே 24) தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய சிறுதானியங்களை கண்டுபிடிக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது.
அதே போல் சிறுதானியங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். இதற்காக இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க தென்னை, பனை மரங்களில் கள் இறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டுமென கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சில நாட்களுக்கு முன்பு வலியுறுத்திய நிலையில்,
“கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரிடையே கலந்தாலோசித்து அரசு முடிவெடுக்கும்” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் சிங்கப்பூரின் முதல் பிரதமருக்கு சிலை!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: வெந்தயக்குழம்பு