ஜூலை 7: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Published On:

| By Minnambalam

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இன்று (ஜூலை 7) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த மே 21 அன்று பெட்ரோல் ஒரு லிட்டர் 110.85 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்த நிலையில், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ 8.22 குறைந்து ரூ 102.63க்கும் டீசல் லிட்டருக்கு ரூ 6.70 குறைந்து ரூ 94.24 க்கு விற்பனை செய்யப்படுகிறது

மே 22 ஆம் தேதியிலிருந்து இந்த விலையே தொடர்ந்து வருகிறது. இன்று 46 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel