டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க…

தமிழகம்

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 31) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்று 43ஆவது பிறந்தநாள். இதனையொட்டி அவரது ரசிகர்கள் #HBDYUVAN என்ற ஹேஷ்டாக் மூலம் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா அப்டேட்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 5,161 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35,68,166 ஆக உள்ளது.

இந்தியா –ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – ஹாங்காங் அணிகள் இன்று மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று 102-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்

உள் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

விநாயகர் சதுர்த்தி திரைப்படங்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படம் இன்று வெளியாகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் நடித்த நட்சத்திரம் நகர்கிறது படம் இன்று வெளியாகிறது.

மிக்கேல் கோர்பசேவ் காலமானார்

சோவியத் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கேல் கோர்பசேவ். இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 91.  மிக்கேல் கோர்பசேவ் சோவியத் யூனியனின் கடைசி அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

நேற்று (ஆகஸ்ட் 30) நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

பூக்கள், பழங்கள் விலை உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜைக்கு தேவையான பூக்கள் மற்றும் பழங்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பல்வேறு நிபந்தனைகளுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.