தென்மண்டல கவுன்சில் கூட்டம்!
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் அடங்கிய தென் மண்டல கவுன்சில் கூட்டம் இன்று (செப்டம்பர் 3) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தென் மாநிலங்களின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும்.
பருவமே பாடல் இன்று வெளியீடு
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகி, நேர்மறையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. படத்தில் இடம்பெற்ற பருவமே பாடல் இன்று (செப்டம்பர் 3) வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம்
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா இன்று (செப்டம்பர் 3) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் ஒட்டு திரைப்படம்
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இயக்குனர் ஃபெல்லினி இயக்கத்தில் நடிகர்கள் அரவிந்த் சாமி, குன்ச்சகோ போபன் நடித்த ஒட்டு திரைப்படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று (செப்டம்பர் 3) 105ஆவது நாளாக, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காங்கிரஸ் உண்டியல் ஏந்தி நிதி வசூல்
ராகுல் காந்தி நடைபயணத்தை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில், இன்று (செப்டம்பர் 3) தமிழகம் முழுவதும் உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்
ஹாங்காங் அணியை வீழ்த்திய பாகிஸ்தான்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் நேற்று (செப்டம்பர் 2) நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி 10.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 38 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 155 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி, ஹாங்காங்கை வீழ்த்தியது.
வானிலை நிலவரம்
வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி,தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா அப்டேட்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால், 5,056 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில், அதிகபட்சமாக 2,161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் – இலங்கை இன்று மோதல்
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று (செப்டம்பர் 3) ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணியுடன் மோதுகிறது.
நீட் விலக்கை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்