இன்றே கடைசி நாள் : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி?

தமிழகம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே (மார்ச் 17) கடைசி நாள் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளில் இருந்து, 10 நாட்களுக்கு
முன்னர் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

அதன்படி தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் வரும் 20ம் தேதி துவங்கி, 27 ம் தேதி நிறைவடைய உள்ளது. எனவே,” வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விரும்புவோர், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க இன்றே கடைசி நாள்” என தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், 18 வயதை நிரம்பியவர்கள் எப்படி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றால், இன்று மாலைக்குள் www.voters.eci.gov.in இணையதளத்திலும், ‘Voter Helpline’ மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இன்று வரை பெறப்படும் வாக்காளர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் துணைப் பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கப்படும்.

அதன்பிறகும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஆனால் அவை தேர்தலுக்கு பின் பரிசீலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

IPL : கோலி vs தோனி vs ரோகித் … ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் யார்?

பியூட்டி டிப்ஸ்: பளிச்சென மின்னவைக்கும் ஃபேஸ் பேக்!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *