வடகிழக்கு பருவமழை தொடங்கி, வட மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதன் மூலம் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
இதனையடுத்து வானிலை மையம் ஏற்கெனவே எச்சரித்தபடி நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
இன்று காலையும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுமா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரம் அடைந்து வரும் நிலையில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணி!
பியூட்டி டிப்ஸ் : மூக்கின் மேல் வரும் கரும்புள்ளிகளை நீக்க என்ன செய்வது?