எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை : வானிலை மையம்!

Published On:

| By Prakash

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 5) 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 5) கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுபோல் நாளை (செப்டம்பர் 6) ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதுபோல் செப்டம்பர் 7ம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அது தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அது தெரிவித்துள்ளது.

ஜெ.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share