தங்கம் விலை இரண்டு நாட்களில் 1000 ரூபாய்க்கும் மேல் விலை உயர்ந்து சவரன் 44 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன் காரணமாகத் தங்கம் விலை இன்று (பிப்ரவரி 2) அதிரடியாய் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 60 ரூபாயும் ஒரு சவரனுக்கு 480 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. இதனால் 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கம் ரூ.43,800க்கு விற்பனையாகிறது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,096 அதிகரித்துள்ளது. முன்னதாக 2020 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.43,360க்கு விற்பனையானது.
அதுவே அதிக உச்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதைவிடவும் விலை அதிகரித்துள்ளது.
அதுபோன்று வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.1,300 விலை உயர்ந்து ரூ.77,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரியா