சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் குறைந்துள்ளது.
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றத்திலேயே இருந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42 ஆயிரத்தை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இறக்குமதி வரி மற்றும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,228ஆகவும், சவரன், ரூ.41,824ஆகவும் இருந்தது.
இந்த நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு தங்கத்தின் விலை இன்று(ஜனவரி 6) சற்றே குறைந்துள்ளது. கிராமிற்கு 34 ரூபாய் குறைந்து ரூ.5190க்கு விற்பனையாகிறது.
சவரனுக்கு ரூ. 304 குறைந்து 41,520 ரூபாயாக உள்ளது. இதேபோல வெள்ளி விலை கிராமிற்கு 50 பைசா குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.50 பைசாவுக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 73,500 ஆக விற்பனையாகிறது.
கலை.ரா
ஹாக்கி உலக கோப்பை: வீரர்களுக்கு பம்பர் பரிசை அறிவித்த பட்நாயக்
அலங்காநல்லூரில் நடப்பட்டது முகூர்த்தக்கால்: ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார் உதயநிதி!