இன்று எந்தெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்?

தமிழகம்

இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் இன்று (டிசம்பர் 10) அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்து தமிழக உள் மாவட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

இதனால் தமிழக உள் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

மோனிஷா

உலக கோப்பை கால்பந்து: பிரேசிலை துவம்சம் செய்த குரோஷியா

மாண்டஸ் புயல்: சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *