தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை… இன்றைய விலை எவ்வளவு?

Published On:

| By Kavi

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.

நேற்று (மே 23) தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்தது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும்,  ஒரு சவரன் ரூ.54,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இரண்டாவது நாளாக  இன்றும் (மே 24) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட்ஆபரண தங்கம் ரூ.800 விலை குறைந்து ரூ.53,200க்கும், ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,650க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.96.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96.500க்கும் விற்பனையாகிறது.

நாளை மறுநாள் (மே 26), வைகாசி மாதம் 13ஆம் தேதி முகூர்த்த நாள் என்பதால், ஏராளமான திருமணங்கள் நடைபெற இருக்கும் நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

share market: வாரக் கடைசி வர்த்தக நாள்… வாரிக் கொடுக்கும் பங்குகள்!

22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் : பழிவாங்கும் நடவடிக்கையா?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment