திருப்பதி பிரம்மோற்சவ திருவிழாவை ஒட்டி, பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு இன்று (அக்டோபர் 13) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த வருடம் 2023-ல் திருப்பதி திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 13-10-2023 (இன்று) முதல் 28-10-2023 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்க உள்ளது.
மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in – tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: குதிரைவாலி பொங்கல்
காத்து அடிக்குது… காத்து அடிக்குது… அப்டேட் குமாரு