ஆவணி மாத பௌர்ணமி நாளை (ஆகஸ்ட் 19) வரவுள்ள நிலையில் இதை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில்,
‘நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று (ஆகஸ்ட் 18) முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக்கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று (ஆகஸ்ட் 18) 130 பேருந்துகளும், நாளை (ஆகஸ்ட் 19) 250 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து இன்று (ஆகஸ்ட் 18) 30 பேருந்துகளும், நாளை (ஆகஸ்ட் 19) மாதவரத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.
மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை (ஆகஸ்ட் 19) 265 பேருந்துகள் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 50 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை (ஆகஸ்ட் 19) இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா முதல் விடாமுயற்சி அப்டேட் வரை!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: சுவையான மீன் பிரியாணியும் அதற்கேற்ற ஏற்ற மீனும்…