அண்மையில் அரசு பேருந்தில் பயணித்த காவலர் ஆறுமுகப்பாண்டி டிக்கெட் எடுக்காமல் பயணித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத்தொடர்ந்து வாரண்ட் இருந்தால் மட்டுமே காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்று போக்குவரத்து கழகம் விளக்கமளித்திருந்தது. காவலர் ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்தநிலையில், சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இதனால் காவல்துறை – போக்குவரத்து போலீசார் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில், காவல்துறை – போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இடையேயான மோதல் போக்கினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
“சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பேருந்தில் ஏறி பயணம் செய்த காவலர் பயணச்சீட்டு பெறாமல் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூகவலைதளங்கள், பத்திரிகைகளில் வெளிவந்தது.
காவல்துறை காவலர்களுக்கு பேருந்தில் இலவச பயணம் கிடையாது என தெரிவுபடுத்திய போக்குவரத்துத்துறையின் செய்தியும் வந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளை மறித்து காவல்துறை அபராதம் விதிக்கும் செய்திகளும் வந்துள்ளன .
இவை அனைத்தும் தங்கள் கவனத்திற்கு நிச்சயமாக வந்திருக்கும். இந்த போக்கினை தடுத்து நிறுத்திட தங்கள் வசமுள்ள காவல்துறைக்கு அறிவுரை வழங்கிடவேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படுத்தும் அனைத்து இலவச பயண திட்டங்களின் முழு பயண கட்டண தொகைகளையும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கிட வேண்டும்.
பொது போக்குவரத்து சேவை என்பது இன்றியமையாதது. அரசு போக்குவரத்துக்கழகங்களை அழிவுப்பாதையிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.
காவல்துறை – போக்குவரத்துக்கழக மோதல் போக்கினை தடுத்திடுங்கள் அரசு போக்குவரத்துக் கழகங்களை பாதுகாத்திடுங்கள் என வேண்டிக்கொள்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜேஷ் தாஸ் வழக்கு: காலையில் கைது.. மாலையில் ஜாமீன்- என்ன நடந்தது?
சீட் பெல்ட் அணியவில்லை: நெல்லை அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம்!
அரசு MTC பேருந்தகளில் ஆண்கள் இருப்பிடம் மற்றும்
முதியோர், உடல் ஊனமுற்றோர் உக்கார இருப்பிடம்
என்று இருந்த ஸ்டிக்கரை அழித்து விட்டார்கள்.
மறுபடியும் ஒட்ட முதல்வருக்கு பரிந்துரை செய்யவும்.
நன்றி