நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர் தகவல்!

தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) ஈரோடு மண்டலம் சார்பில் 15 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,

”அதிமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கவில்லை.

திமுக ஆட்சியில்தான் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிமுக ஆட்சியில் மாற்றியமைத்த ஊதிய விகித்தை மீண்டும் சீரமைத்து வழங்கப்பட்டது‌.

5 சதவிகித ஊதிய உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறது. ஊதிய உயர்வு பேச்சு வார்த்தைக்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது பணி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடனடியாக புதியதாக ஊழியர்களை நியமிக்க முடியாத நிலையில், அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இதனால் கடந்த கோடை விடுமுறையில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டு, போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

தற்போது, 8 சிஎன்ஜி பேருந்துகள் சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. தொடர்ந்து பரிசோதனை அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

500 மின்சார பேருந்துகள் வாங்க முதல்வர் உத்தரவிட்டதில், முதல் கட்டமாக 100 பேருந்துகளை வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் மின்சார பேருந்துகள் சென்னையில் அறிமுகப்படுத்தப்படும். மீதமுள்ள பேருந்துகள் மற்ற நகரங்களில் இயக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வு பிரச்சினை, காலம் காலமாக இருக்கிறது. இதன் காரணமாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்துப் பேசியதால், கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் இந்த பிரச்சினை இல்லை.

மேலும், ஒரு சில புதிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டண உயர்த்தை வசூலிக்கும் போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சி காலத்தில், புதியதாக ஒரு ஓட்டுநர் மற்றும் நடத்துநரைக் கூட பணி அமர்த்தவில்லை. இதனால் 2,000 பேருந்து வழித்தடங்களில் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது.

தற்போது அதில் 800 வழித்தடங்களில் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகிறது. மீதமுள்ளதையும் புதிய பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஆய்வு செய்து, தேவை இருப்பின் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: பளபளக்கும் முகத்துக்கு ஹோம்மேட் க்ளென்ஸர் இதோ!

கிச்சன் கீர்த்தனா : மைசூர் ரசம்

ஆடியவே தள்ளுபடி பண்ணியாச்சி : அப்டேட் குமாரு

திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரா நீதிபதி சந்துரு? : அண்ணாமலை கேள்வி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts