தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் தொலைதூரம் செல்லும் வகையில், ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்துகளில் பணியாளர் பற்றாக்குறையின் காரணமாக, தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.535 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஒப்பந்த விதிகள் மற்றும் குறைந்தபட்ச கூலி விதிகளுக்கு முரணாக உள்ளதாக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தநிலையில், ஓட்டுநர், நடத்துனர் பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களுக்கும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, டிசிசி பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.882 மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.872 ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உண்டா, இல்லையா? கேட்டவரிடம் ஸ்டாலின் சொன்ன பதில்!
ஆசியாவிலேயே முதன்முறை… வியக்க வைக்கும் சென்னை