டிஎன்பிஎஸ்சி: குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 5 ஆயிரத்து 208 இடங்களுக்கான குரூப் 2, 2ஏ பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகி, அதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வை எழுதுவதற்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் தேர்வை எழுதினர்.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு வகைகளில் ஆட்சேர்ப்பு நடக்கிறது. சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவுப்படி புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டி இருந்ததால், முடிவுகள் வெளியாவதில் தாமதமானது.

இந்நிலையில் , இந்த தேர்வு முடிவுகள் இன்று (நவம்பர் 8 ) வெளியிடப்பட்டுள்ளன.

தங்களது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி முதன்மைத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“வீக் ஆகிட்டேன்”கண்ணீர் விட்ட சமந்தா

10% இடஒதுக்கீடு: அன்றே மாநிலங்களவையை அலறவைத்த கனிமொழி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *