கடந்தாண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று (மார்ச் 24) வெளியிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. 10,117 அரசு பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இத்தேர்வினை தமிழ்நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் எழுதினர்.
தேர்வெழுதி 8 மாதங்கள் ஆகியும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனையடுத்து தேர்வு முடிவுகளை விரைவாக அறிவிக்கக்கோரி கடந்த சில மாதங்களாக #WeWantGroup4Results ஹேஸ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து தேர்வர்கள் பரபரப்பை ஏற்படுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
tnpscexams.in என்ற தளத்தில் பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் பதிவு செய்து தங்களது தேர்வு முடிவுகளை தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ராகுல்காந்தியை பார்த்து பாஜக பயப்படுகிறது! – முதல்வர் ஸ்டாலின்
சொதப்பல் SKY சூப்பர் SKY ஆக தினேஷ் சொல்லும், ‘ஜெர்சி’ சீக்ரெட்!
”என்ன விலை கொடுக்கவும் தயார்”-தகுதி நீக்கத்துக்குப் பின் ராகுல் காந்தி