டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று (ஜூலை 14) வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் அரசு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். குரூப் 1 முதல் குரூப் 8 வரை தனித்தனியே தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
கடந்த மே மாதம் 21 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடந்து முடிந்தது. வரும் ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைப்பெற உள்ளது. இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணிக்கு முடிவடையும். தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் http://tnpscexams.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெளியாகும். 7,382 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு 21,83,225 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மோனிஷா
Hall ticket varalla