காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று (ஜனவரி 30) அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கிராம நிர்வாக அலுவலர் (விஏஒ), இளநிலை உதவியாளர், வனக் காப்பாளர், வன காவலர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக இன்று முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வாணைய இணையத் தளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும்.
தேர்வர் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருந்தால், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் மார்ச் 4 ஆம் தேதி மதியம் 12.01 முதல் மார்ச் 6 ஆம் தேதி காலை 11.59 மணி வரை விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஜூன் 9 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மலேரியாவுக்கு தடுப்பூசி… உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்!
அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் எத்தனை லட்சம் தெரியுமா?