டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு குரூப் 2 தேர்வு எழுத 57,641 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
இதனைத் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in– ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது ஒரு முறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் 7 மாதங்கள் ஆகியும் வெளியாகாத நிலையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மோனிஷா
திரிபுராவில் விறுவிறுப்பாக துவங்கிய வாக்குப்பதிவு!
ஐசிசி தரவரிசை: சில மணி நேரத்தில் பின்வாங்கிய இந்தியா