டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வருகிற அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிர்வாக காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு குருப்-1 பதவிகளுக்கான தேர்வு அறிக்கை ஜூலை 21ஆம் தேதி வெளியானது.
அதன்படி, குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்குத் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 22ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதற்கான முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தத் தேர்வு நிர்வாகக் காரணங்களுக்காகத் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 முதல்நிலைத் தேர்வு, நவம்பர் 19ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்