குரூப் 2, குரூப் 4 ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

தமிழகம்

குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் எனவும் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (செப்டம்பர் 29) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 5 ஆயிரத்து 208 இடங்களுக்கான குரூப் 2, 2ஏ பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகி, அதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வை எழுதுவதற்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் தேர்வை எழுதினர்.

இதன் தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்பட இருக்கிறது என இன்று (செப்டம்பர் 29) தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதுபோல் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது.

தற்போது இந்த குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதியிருந்தனர்.

ஜெ.பிரகாஷ்

சூரி உணவகம் ரெய்டு: அமைச்சர் மூர்த்தி விளக்கம்!

பொன்னியின் செல்வனுக்காக எம்.ஜி.ஆர். போராடியது ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.