குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பிப்பார்கள். இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் எழுத்து தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குரூப் 4 காலி பணியிடங்கள் அறிவிக்கப்படவில்லை.
குரூப் 1 பதவிகளில் காலியாக இருக்கும் 32 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே அதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பணியிடத்துக்கான முதல் நிலை தேர்வு வருகிற நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மாதத்தில் 384 ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணியிடங்களுக்கும், அடுத்த மாதத்தில் (அக்டோபர்) 400 தொழில்நுட்ப பணியிடங்களுக்கும் என 13 வகையான துறை சார்ந்த காலி பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு புள்ளியியல் துறை, தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு துணை சேவைகள், தமிழ்நாடு தடய அறிவியல் துணை சேவைகள், தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
முறைப்படி இந்த தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
மோனிஷா
சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்கள் : உறுதியளித்த தர்மன் சண்முகரத்னம்
தபால் துறையுடன் இணையும் போக்குவரத்து துறை: வீட்டிற்கே வரும் ஆவணங்கள்!
Good