தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணையை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, டிஎன்பிஎஸ்சி 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணையை வெளியிட்டது. அதில், குரூப் 1 மற்றும் குரூப் 2 பணிகளுக்கான எந்த ஒரு விவரமும் இடம்பெறவில்லை. இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், விமர்சனங்களும் எழுந்தன.
மேலும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 1,750 என்ற அளவிலேயே இருந்தது. தேர்வர்கள் பலரும் காலிப் பணியிடங்களை அதிகரிக்க தேர்வாணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையை இன்று (டிசம்பர் 20) வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்வு குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 2023இல் வெளியிடப்படும் எனவும் முதல்நிலை தேர்வு நவம்பர் மாதமும், முதன்மைத் தேர்வு ஜூலை 2024இல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் 2024 மார்ச் மாதமும், முதன்மைத் தேர்வு முடிவுகள் 2024 நவம்பர் மாதமும் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
பாபர் அசாம் மிகப்பெரிய பூஜ்ஜியம்: பாகிஸ்தான் முன்னாள் வீரர்!
பொது இடத்தில் மது: டாஸ்மாக்கும் தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு!