என்ஜினீயரிங் பணிக்கான தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்:  டி.என்.பி.எஸ்.சி

Published On:

| By Kavi

TNPSC Engineering exam 2024

பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், தென் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில்  ஒருங்கிணைந்த  என்ஜினீயரிங் பணிக்கான தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே திட்டமிட்டபடியே தேர்வை நடத்துகிறது.

ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் சேவைகளில் வரும் பல்வேறு துறைகளில் உள்ள 369 என்ஜினீயரிங் பணிக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது. அதன்படி, இந்த பணிக்கான தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் 40,132 ஆண்கள், 19,496 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 59,630 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

இவர்களுக்கான தேர்வு வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 202 தேர்வு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே அங்குள்ள தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே திட்டமிட்டபடியே தேர்வை நடத்துகிறது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: ஹேர்  கலர்… ப்ளீஸ் கேர்!

கிச்சன் கீர்த்தனா: கார பிஸ்கட்!

டிஜிட்டல் திண்ணை: மோடியை அழைத்த உதயநிதி… திமுக கூட்டணித் தலைவர்கள் அதிருப்தி!

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment