Tngovt MOU of 83 crores

முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.83 கோடி ஒப்பந்தம் கையெழுத்து!

தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார் . இதில் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (மே 25) ஜப்பான் சென்ற முதலமைச்சர் இன்று (மே 26) ஜப்பான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

இதனிடையே இன்று காலை சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) என்ற நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர்பேக் இன்ஃப்ளேடர் (Airbag Inflator) தயாரிப்பு தொழிற்சாலையை 83 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 53 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Tngovt MOU of 83 crores with japan organisation front of mk stalin

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது டைசல் நிறுவனத்தின் இயக்குநர் கென் பாண்டோ, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு கையெழுத்திட்டனர்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மோனிஷா

புதிய நாடாளுமன்ற விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *