உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளைக் கொட்டி முதலீடு செய்து வருகின்றன.
இதுவரை எந்தெந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்திருக்கின்றன என்று பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ – ரூ.35,000 கோடி முதலீடு – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை.
டாடா எலெக்ட்ரானிக்ஸ் – ரூ12,082 கோடி முதலீடு 40,500 பேருக்கு வேலை (கிருஷ்ணகிரியில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கம்)
பெகாட்ரான்-ரூ.1000 கோடி முதலீடு – 8 ஆயிரம் பேருக்கு வேலை (நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம்)
ஜே.எஸ். டபிள்யூ – ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு.
ஹூண்டாய் – ரூ.6,180 கோடி முதலீடு.
மிட்சுபிஷி – ரூ.200 கோடி முதலீடு (குளிர்சாதன தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம்)
கோத்ரெஜ் நிறுவனம் – ரூ.515 கோடி முதலீடு
ஃபர்ஸ்ட் சோலார் – 5,600 கோடி ரூபாய் முதலீடு, 1100 பேருக்கு வேலை.
வின்ஃபாஸ்ட் – ரூ.16,000 கோடி முதலீடு (தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார வாகன கார் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலை)
குவால்காம் – ரூ.177 கோடி முதலீடு. 1600 பேருக்கு வேலை
டி.வி.எஸ். நிறுவனம் – ரூ.5,000 கோடி முதலீடு. 500 பேருக்கு வேலை.
தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. நாளை இரண்டாவது நாளாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா